அண்ணாச்சி கடைகள் அமேஸான் ஆகும் அதிசயம்!
கோரோனா கோபத்திற்கு ஆளானது மனிதர்கள் மட்டுமல்ல, மளிகைக் கடைகளும் தான். பெரிய டிபார்மெண்ட் ஸ்டோர்கள் முதல் ஆன்லைன் ப்ராண்டுகள் வரை பலவும் பாதிக்கப்பட்டிருந்தாலும் மளிகை கடைகளில் நெடி கொஞ்சம் தூக்கல் தான். அருகில் இருப்பதாலும், அடிக்கடி பார்ப்பதாலும் மளிகைக் கடைகளின் மகத்துவத்தை நாம் மறந்துவிடுகிறோம். என் வீட்டிற்கருகில் இருக்கும் அண்ணாச்சி கடையில் சோஷியல் டிஸ்டன்சிங் மெயிண்டேயின் செய்து சாமான் வாங்க நின்ற போது மனதில் எழுந்த சில எண்ணங்களை எழுதுகிறேன்!
சமீப காலமாக நாடெங்கும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள் கொரோனாவை காட்டிலும் வேகமாக பரவி வருகிறது. போதாக்குறைக்கு அன்றாட சாமான்களை ஆன்லைனில் விற்கும் ப்ராண்டுகள் புற்றீசல் போல் பெருகி வருகிறது. இவை தவறல்ல. நாடு வளரும் போது, தங்கள் சௌகரியம் மட்டுமே மற்றவை காட்டிலும் மக்களுக்கு முக்கியமாக படும். அதனால் இவ்வகை புதுமைகளின் வளர்ச்சியை தடுக்க முடியாது. தடுக்கவும் கூடாது. மாட்டு வண்டி அசௌகரியம், காரில் செல்வதே கம்ஃபர்ட் என்று மக்கள் முதல் மளிகைகடைக்கார்கள் வரை நினைக்கும்போது மற்ற விஷயங்கள் மட்டும் மாறாமல் பழையபடியே இருக்கவேண்டும் என்று நினைத்தால் ‘இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல’ என்று கோரோனா நம் காதுபட கேட்கும்!
அப்படியென்றால் மாட்டு வண்டி போல் மளிகை கடைகளும் காணாமல் போக தான் வேண்டுமா? அவசியமில்லை. இந்நிலை மாற வாடிக்கையாளர்கள் மாறவேண்டும், மளிகை கடைகளை காப்பாற்ற அரசாங்கம் சட்டம் இயற்றவேண்டும் என்று கூறுவது தப்பாட்டம். அப்படி நடக்கப் போவதில்லை. அப்படி கூறுபவர்கள் டெய்லரிடம் சட்டை தைத்து போட்டுக்கொண்டதை மறந்து ரெடிமேட் சட்டை போடுவதை நிறுத்திவிட்டு இப்படியெல்லாம் கூறினால் தேவலை. அவர்கள் கல்யாண ப்ரோக்கர் தந்த ஃபோட்டோக்களிலிருந்து கட்டிக்கப் போகிறவளை கரெக்ட் செய்த காலத்தை துறந்து ஆன்லைனில் பெண் தேடுவதை நிறுத்தி மளிகை கடைகளுக்கு கொடி பிடிப்பது உசிதம்.
வாழ்க்கையின் சௌகரியங்களுக்கு ஒரு விலை இருக்கிறது. அதை கொடுக்க மக்கள் தயாராய் இருக்கும் போது மக்களை மாறச் சொல்வது மடத்தனம். மளிகை கடைகள் தான் தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும். மாற்றிகொண்டால் தான் மீண்டும் அவர்கள் கல்லா ஃபுல்லாகும்!
கொரோனா எல்லாருக்கும் உபத்திரவமாக இருந்தாலும் மளிகை கடைகளுக்கு ஒரு உபகாரத்தை செய்திருக்கின்றன. அதை மளிகைகடைக்கார்கள் உணர்வது நல்லது. பல டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் பாதி திறந்து பாதி மூடிக் கிடக்க, ஆன்லைன் கடைகள் முழுவதுமாய் முடங்கிக் கிடக்கும் இச்சமயத்தில் மளிகை கடைகள் தயவில் தான் வீடுகளில் அடுப்பெரிகிறது. அதற்காக ‘பார் எங்கள் அருமையை’ என்று மளிகை கடைகள் மார்தட்டிக்கொள்ளும் நேரமல்ல இது. கொரோனா டாடா கட்டி மலையேறி மறையும் காலம் வரை தான் இந்த நல்ல காலம் நிலைக்கும் என்பதை உணர்வது அவர்களுக்கு நல்லது. இந்த நேரம் மீண்டும் தாங்கள் தலையெடுக்க காலம் தரும் செகண்ட் சான்ஸ் என்பதை அண்ணாச்சிகள் அறிவது அவசியம்.
இதற்கு மளிகை கடைகள் மார்க்கெட்டிங் தெரிந்துகொண்டு அதோடு கொஞ்சம் தொழிற்திறனை அரவனைத்தால் தேவலை. மார்க்கெட்டிங் என்றால் என்ன? யார் வாடிக்கையாளர், அவருக்கு என்ன தேவை, அத்தேவையை மற்றவர்களை விட எப்படி சரியாக பூர்த்தி செய்வது, அப்படி பூர்த்தி செய்வதை அவர்களுக்கு எப்படி சொல்லிக்காட்டிக்கொண்டே இருப்பது. இதை மளிகைகடைகள் செயலாக்கக் கூடிய விதம் பற்றிப் பார்ப்போம்.
மளிகை கடை கஸ்டமர்கள் அதைச் சுற்றி வசிப்பவர்கள் என்பது தெரிந்ததே. ஆனால் அருகிலிருக்கும் மளிகை கடை தாண்டி எதற்கு தள்ளியிக்கும் டிபார்ட்மெட்ண்ட் ஸ்டோர் அல்லது ஆன்லைனில் ஆர்டர் செய்கிறார்கள். இதை உணர்ந்தாலே விடை தெரியும். அதற்காக டிபார்ட்மெண்ட் ஸ்டோர் போல் தாங்களும் கடையை தூசி தட்டி, ஏசி மாட்டி, கடையை அழகாக்கவேண்டும் என்று கூறவில்லை. அப்படி செய்தாலும் தப்பில்லை. ஆனால் அது மட்டுமல்ல வாடிக்கையாளர்கள் தேவை. தங்களுக்கு தேவையான எல்லா பொருள்களும் கிடைக்கவேண்டும், அதைப் பார்த்து படித்து தேர்வு செய்யும் வசதி வேண்டும், அவசரத்திற்கு கேட்ட நேரத்தில் வீட்டிற்கே டெலிவரி செய்யவேண்டும். இவை தான் அவர்களுக்கு தேவை. இதை தான் தள்ளியிருக்கும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களும் ஆன்லைன் ப்ராண்டுகளும் மளிகைக் கடைகளை விட பெட்டராய் செய்கின்றன. இதைத் தான் மளிகைக்கடைக்காரர்கள் செய்யத் துவங்கவேண்டும். இவை தங்களுக்கு சாத்தியப்படாது என்று இத்தனை நாள் மளிகை கடைகாரர்கள் விட்டேத்தியாய் விட்டுவிட்டார்கள். இதை அவர்கள் ஈசியாய் சரி செய்யலாம். செய்யவேண்டும். செய்ய முடியும்!
மளிகை கடை சின்னதாய் இருந்தால் என்ன? வாடிக்கையளர் கேட்ட பொருளை, கேட்கும் நேரத்தில், கேட்டவர் வீட்டு வாசலில் டெலிவரி செய்யும் வகையில் தங்களை மாற்றிக்கொண்டால் போயிற்று. டிபார்ட்மெண்ட் ஸ்டோர், ஆனைலன் போட்டியை விட பெட்டராய் கஸ்டமர் தேவையை பூர்த்தி செய்ய புது வழி பிறந்திருக்கிறது. எளிய முறைகள் வளர்ந்திருக்கிறது.
கஸ்டமர் கேட்கும் எல்லா பொருள்களையும் ஆறடி கடைக்குள் அண்ணாச்சிகள் அடுக்க முடியுமா? வீட்டிலிருந்தே கஸ்ட்மர்கள் ஆர்டர் செய்யும் வகையில் கடையை மாற்ற முடியுமா? வந்த ஆர்டரை வாடிக்கையாளர் வீடு தேடி கரெக்ட்டாய் டெலிவரி செய்ய முடியுமா?
பேஷாய் முடியும். அதற்கான புதிய எளிய தொழிற்நுட்பம் பிறந்திருக்கிறது. இப்படி சொல்வதால் எதோ கம்பசூத்திர மேட்டர் கூறப்போகிறேன் என்று மலைக்காதீர்கள். மளிகை கடைகளுக்கு தேவை சிம்பிள் சிஸ்டமும், அதைவிட சிம்பிளான ஆப்ஸ் (Apps) மட்டுமே. முதலில் தங்கள் கடையில் உள்ள பொருள்களை ஆன்லைனில் ஆர்டர் செய்ய தேவையான ஆப் ஒன்றை நிறுவவேண்டும். அதை தங்கள் கஸ்டமர்களிடம் கூறி அவர்களை டவுன்லோட் செய்யவைக்கவேண்டும். அதன் மூலம் தங்களுக்குத் தேவையான பொருள்களை படித்து, பார்த்து தேர்வு செய்ய வைக்க முடியும். அவர்கள் ஆர்டரை கடையின் பில்லிங் சாஃப்வேருடன் இணையச் செய்யவேண்டும். வந்த ஆர்டர்களை இனம்பிரித்து ஆர்டர் செய்தவர் வீட்டிற்கு சரியாக டெலிவரி செய்யும்படி டெலிவரி பாய்ஸ் வைத்திருக்கவேண்டும். அவ்வளவே!
என்ன ஈசியா இத்தனை சொல்லிவிட்டாய்? எனக்கு இத்தனை தொழிற்திறன் தெரியாது என்று அண்ணாச்சிகள் பின்வாங்கத் தேவையில்லை. வாட்ஸ் அப்பில் மெசேஜ் பார்த்து அனுப்ப தெரிந்தவர்களுக்கு இந்த ஆப்ஸை உபயோகிப்பது சுலபம். அநியாயத்திற்கு எளிமையான ஆப்ஸ். இதை மளிகைகடைகளுக்கென்றே பிரத்யேகமாக தயாரித்து வழங்கியிருக்கிறது ’கோஃப்ரூகல்’ என்கிற தமிழ் கம்பெனி. அந்த ஆப்ஸ்ஸை தங்கள் பில்லிங் சாஃப்ட்வேருடன் இணைத்து பிரயோகிப்பது வெகு எளிது. அது மட்டுமல்ல, இருக்கும் கஸ்ட்மர்களை தக்க வைத்துக்கொள்ளவும் புதிய கஸ்டமர்களை பெற வழி செய்யவும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள், ஆன்லைன் ப்ராண்டுகளோடு கூட போட்டி போடும் வழியை காண்பிக்கும் இந்த ஆப்ஸ். ஆன்லைன் ப்ராண்டுகளாவது அடுத்த நாள் தான் டெலிவரி செய்யும். மளிகை கடைகள் அடுத்த கணமே வாடிக்கையாளர் வீடு சென்று சேர்க்க உதவும் இவை!
இதையெல்லாம் விட பெரிய விஷயம் ஒன்று உண்டு. கரோனா காலத்தில் சின்ன மளிகை கடைகளுக்கு உதவும் எண்ணத்தில் அவர்கள் வியாபாரத்தை விருத்தி செய்து வளர்க்கும் விதமாக அடுத்த ஆறு மாதத்திற்கு இந்த ஆப்ஸை கடைகளுக்கு இலவசமாக வழங்குகிறது கோஃப்ரூகல். வாய்ப்பு வாசல் கதவை தட்டும் போது திறக்கவேண்டும் என்பார்கள். இந்த வாய்ப்பு கதவை தட்டாமல் தேடி வந்து மடியில் அமர்கிறது. இதை கொஞ்சி குலாவ வேண்டியது தான் பாக்கி!
கொஞ்சம் மார்க்கெட்டிங், கொஞ்சம் தொழிற்நுட்பம். சேர்த்தால் போதும். பார்த்து வளர்ந்த மளிகை கடைகள் மீண்டும் மலரத் துவங்கும். பிறந்தது முதல் நம்மோடு அன்னியோன்யமாக பழகி வரும் அண்ணாச்சி கடைகள் அமேஸான் ஆகும்!